/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பொது மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பொது மருத்துவ முகாம்
ADDED : ஜன 23, 2025 05:43 AM

விக்கிரவாண்டி: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம் நடந்தது.
விக்கிரவாண்டி வட்டார வளமையத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் முகாமை துவக்கி வைத்தார்.சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார் .
மருத்துவமில்லா தொழில் சார் மருத்துவர் மாணிக்கராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தனர்.
பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு,இல்லம்தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.