/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க அரசின் மானிய உதவித் திட்டம்
/
கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க அரசின் மானிய உதவித் திட்டம்
கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க அரசின் மானிய உதவித் திட்டம்
கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க அரசின் மானிய உதவித் திட்டம்
ADDED : ஆக 06, 2025 01:04 AM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில், கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க, அரசு சார்பில் மானியத் தொகை வழங்கப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு, மானியத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.
ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னர், 5 ஆண்டுகளுக்கு பின்னரே, மீண்டும் மானியத் தொகை கோரலாம்.
இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி, குடிநீர் வசதிகள், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் மற்றும் பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், சுற்றுச்சுவர் வசதி உள்ளிட்ட பணிகளுக்கு மானிய நிதி வழங்கப்படும்.
மேலும், 10 ஆண்டுகால தேவாலய கட்டடத்திற்கு ரூ.10 லட்சம், 15 ஆண்டு கால கட்டடத்திற்கு ரூ.15 லட்சம், 20 ஆண்டு கால கட்டடத்திற்கு ரூ.20 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறியலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.