/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான எறிபந்து போட்டி அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
/
மாநில அளவிலான எறிபந்து போட்டி அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான எறிபந்து போட்டி அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான எறிபந்து போட்டி அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 16, 2025 08:05 PM

விழுப்புரம்,: மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்ற மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கல்வித்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில், மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளி 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் குழுவும்,17 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவிகள் குழு கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இந்த குழுவினர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியர் சகாயமேரி ஞானமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் சிரில்குமார் ராபின், பிரகாஷ் உள்ளிட்டோர் பாராட்டினர்.