/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் 26ம் தேதி ஓய்வூதியர் குறைகேட்பு
/
விழுப்புரத்தில் 26ம் தேதி ஓய்வூதியர் குறைகேட்பு
ADDED : நவ 14, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 26ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற
ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் கூட்டம், நடைபெற உள்ளது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 26ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்குகிறார். மாநில ஓய்வூதியர்கள் நல இயக்குநர் முன்னிலை வகிக்கிறார்.
இதில், அரசு ஓய்வூதியர்கள், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி தெரிவித்துள்ளார்.

