UPDATED : நவ 04, 2026 12:20 PM
ADDED : நவ 04, 2026 12:17 PM
அவலுார்பேட்டை: பெண்ணிடம் வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனுார் அடுத்த உண்ணாமனந்தல் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் கார்த்திகேயன், 44; கூலி தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி ஆண், பெண் என 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில், இவருக்கும் வடவெட்டி கிராமத்தை சேர்ந்த சித்ராதேவி, 39; என்பவருக்கும் கடந்த, அக்., 30 ம்தேதி, திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பால முருகன் கோவிலில் இரண்டாவது திருமணம் நடந்தது. சித்ரா தேவிக்கு இது முதல் திருமணம்.
திருமணம் முடிந்து மறுநாள் 31 ம்தேதி, காலையில், மனைவி பிடிக்கவில்லை என்றும், கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வேண்டும் என கார்த்திகேயன் கேட்டுள்ளார்.
இது குறித்து சித்ராதேவியின் புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
