/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு கல்லுாரியில் உதவி மையம் துவக்கம்
/
வானுார் அரசு கல்லுாரியில் உதவி மையம் துவக்கம்
ADDED : டிச 12, 2024 07:02 AM

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் தகவல் பெறும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் தகவல் பெறும் வகையில், உதவி மையம் அமைக்க வேண்டும் என்று கல்லுாரி கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையொட்டி, திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் செயல்பட்டு வரும் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதல்வர் வில்லியம் தலைமையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி மையத்தில், கணினி அறிவியல் துறைத்தலைவர் அருள்முருகன், பேராசிரியர்கள் சுதாகர், ஆரோக்கியநாதன், அர்ச்சனா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர்.
வானுார் மற்றும் அதைச்சுற்றியுள்ள மக்கள், மாணவர்கள் இந்த உதவி மையத்தை பயன்படுத்தி, இந்த கல்லுாரி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த உதவி மையம் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும் என்றும் முதல்வர் வில்லியம் தெரிவித்துள்ளார்.