ADDED : மே 15, 2025 11:33 PM

விழுப்புரம்: விழுப்புரம் சட்ட கல்லுாரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லுாரி கனவு உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி கூறியதாவது;
விழுப்புரத்தில் கல்லுாரி கனவு நேற்று துவங்கி, வரும் 20ம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது.
இதில், பிளஸ் 2 வகுப்பு முடித்தவர்களில், சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறன் மாணவர்கள், அரசு நலத்துறை பள்ளியில் பயில்வோர், பெற்றோரை இழந்தோர், இடைநின்றவர்கள், இடைநிற்றல் ஏற்பட வாய்ப்புள்ளோர், அரையாண்டு தேர்வில் தோல்வியடைந்தோர், வருகை சதவீதம் குறைந்தோர், பழங்குடியின மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட 5,458 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.
எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன் ஆகியோர், உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குநர் நடராஜன், அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.