ADDED : நவ 03, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே முன்விரோத தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த வீடூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 43; அதே ஊரைச் சேர்ந்தவர் மூவேந்தன், 38; இருவரது குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 31ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மூவேந்தன் மற்றும் குணசேகரன் தரப்பினர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், விக்கிரவாண்டி போலீசார், மூவேந்தன், அவரது தம்பி இளஞ்செழியன், 27; குணசேகரன், சதீஷ், 33; சாந்தன், 29; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.