ADDED : மார் 16, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தலிங்கம் மனைவி சின்னபொண்ணு, 70: கூலித் தொழிலாளி. தனியாக வசித்து வருகிறார்.
நேற்று மாலை 6:00 மணியளவில் இவரது வீட்டிற்கு மேலே சென்ற மின் கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு அவரது கூரை வீடு தீப்பிடித்தது.
விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
வி.ஏ.ஓ., எலிசபெத் மேரி, கிராம உதவியாளர் சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதம் குறித்து மதிப்பீடு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.

