/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 09, 2024 04:14 AM

திண்டிவனம், : விழுப்புரம் மாவட்டத்தில், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுதும் அ.தி.மு.க., சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. திண்டிவனத்தில், தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, ஜெ.,பேரவை நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவெண்ணெய்நல்லுார்
திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் நடந்த போராட்டத்திற்கு, நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் வரவேற்றார். அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் அற்புதவேல், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன், முகுந்தன், முத்தமிழ்ச்செல்வன், ராஜா, மாவட்ட மருத்துவரணி செயலாளர் முத்தையன், நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகிகள் விழுப்புரம் காந்தி சிலையருகில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி
அனந்தபுரம் பேரூராட்சி, செஞ்சி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு, நகர செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சோழன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நாராயணன், தகவல் தொழில் நுட்பட பிரிவு ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், அவை தலைவர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
வானுார்
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம் முன்னிலை வகித்தனர். இதில், மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், பாஸ்கர், கோட்டக்குப்பம் நகர அவைத் தலைவர் தண்டபாணி, மீனவரணி ஸ்ரீதர், இளைஞரணி வெங்கடேசன், மாணவரணி அன்பு, கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்கேற்றனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு, நகர செயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய பேரவை செயலாளர் சரவணக்குமார், துணைச் செயலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.