ADDED : மார் 21, 2025 04:28 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். எஸ்.சி., - எஸ்.டி., பெடரேஷன் மாவட்ட தலைவர் நாகராஜ் வரவேற்றார். பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர்கள் பஞ்சவர்ணம், கோவிந்தசாமி, விநாயகமூர்த்தி, கடலுார் மாவட்ட தலைவர் தணிகை செல்வன், கள்ளக்குறிச்சி ஜீவன்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு, அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு துறை இடத்தில் இலவச வீட்டு மனை வழங்கி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.
மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல நிதிகள் மூலம் அங்குள்ள இடங்களை வாங்கி, நவீன அடுக்குமாடி குடியிருப்பு, சமுதாயக்கூடம், நுாலகம், பொது கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.