UPDATED : அக் 31, 2026 09:47 PM
ADDED : அக் 31, 2026 09:44 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மனைவி மீது, தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மதன்ராஜ், 30; வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி, 29; இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு, மதன்ராஜ் மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டதால், குடும்ப பிரச்னை ஏற்பட்டு, பாக்கியலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார்.
இந்நிலையில், மதன்ராஜ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் அறிந்த பாக்கியலட்சுமி, கடந்த அக்., 9ம் தேதி அய்யூர்அகரத்திற்கு வந்து, கணவர் மதன்ராஜிடம் தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மதன்ராஜூம் அவரது குடும்பத்தினரும் பாக்கியலட்சுமியை திட்டி, கடுமையாக தாக்கி அனுப்பியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், மதன்ராஜ், அவரது தந்தை முருகன்,49; தாயார் அம்பிகா, 46; ஆகியோர் மீது வழக்கு பதிந்து, மதன்ராஜை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
