/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரு செந்துார் கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்க விழா
/
திரு செந்துார் கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்க விழா
திரு செந்துார் கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்க விழா
திரு செந்துார் கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்க விழா
ADDED : ஆக 27, 2025 07:08 AM

விழுப்புரம் : திருக்கோவிலுார் டி.கீரனுார் புறவழிச்சாலையில் திரு செந்துார் கார்டன் புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை டி.கீரனூர் புறவழிச் சாலையில் (திருக்கோவிலூர்- திருவண்ணாமலை பைபாஸ்) ஜி.பி.ஆர்.பெட்ரோல் பங்க் அருகில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புகழ்பெற்ற சி.கே.ஆர். குரூப்ஸ் நிறுவனத்தின் சார்பில் திரு செந்தூர் கார்டன் எனும் புதிய மனை பிரிவு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் தொழிலதிபர் பிரபு சிவராஜ், உரிமையாளர் கோவிந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி புதிய மனை பிரிவை துவக்கி வைத்தனர்.
விழாவில் சர்வேயர் சுரேஷ், இன்ஜினியர் சந்திரசேகர், திருக்கோவிலுார் முருகன், தீனதயாளன், சின்னா, ஜோப் மற்றும் டி. கீரனுார் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கான மனைகளை முன்பதிவு செய்தனர்.
மனை பிரிவின் சிறப்பம்சங்கள் குறித்து உரிமையாளர்கள் கோவிந்தன், ரமேஷ், ராஜசேகர், ராமமூர்த்தி, முத்து, ஆகியோர் கூறியதாவது:
மனை பிரிவில் 30 மற்றும் 24 அடி அகல சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மனையை சுற்றிலும் உயரமான பாதுகாப்பு மதில் சுவர், மின் இணைப்பு மற்றும் சாலைகள் முழுவதும் தெரு விளக்கு வசதி, ஒவ்வொரு மனைக்கும் சுவையான குடிநீர் இணைப்பு வசதி, மனையை சுற்றிலும் மழை நீர் வடிகால் வசதி, மனையில் நீர்த்தேக்க தொட்டி போன்ற அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மனைப்பிரிவை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள், வியாபார ஸ்தலங்கள், கல்விக் கூடங்கள் பெருகி வருவதால் எங்கள் மனையில் நீங்கள் செய்யும் முதலீடு குறுகிய காலத்திலேயே பன்மடங்காக உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.