/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி துவக்கம்
/
விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி துவக்கம்
விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி துவக்கம்
விழுப்புரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி துவக்கம்
ADDED : நவ 13, 2024 05:24 AM
விழுப்புரம் : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி விழுப்புரத்தில் நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு :
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த 3 நாட்கள் பயிற்சி வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த பயிற்சி, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடக்கிறது.
பயிற்சியில், ஏற்றுமதி சர்வதேச வர்த்தகம் அடிப்படைகள், சந்தை தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தபட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலவானியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை பற்றிய தகவல்கள், ஏற்றுமதி, இறக்குமதி விதிமுறைகள், ஆவணங்கள் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில், ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள், இதை பெறும் முறைகள் பற்றிய ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள், மானியங்கள் பற்றி விளக்கப்படுகிறது. ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் அனைவரும் பயிற்சியில் சேரலாம்.
இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விபரங்கள் பெற விரும்புவோர், www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்கள் பெற, மொபைல் 9080130299, 9080609808 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடிப்போருக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், www.editn.in வலைதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

