/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : நவ 03, 2024 05:40 AM

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், புத்தாக்கப் பயிற்சி நடந்தது.
கல்லுாரி கலையரங்கில் நடந்த பயிற்சி துவக்க விழாவிற்கு, கல்லுாரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, மாணவர்களுக்கு நவீன கால உத்திகள் மற்றும் வேலைவாய்ப்பினை எளிதாக பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கினார்.
கல்விக் குழும இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் அனைத்துத் துறையை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரி சதீஷ்குமார் நன்றி கூறினார்.