/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயிர்களுக்கான நிவாரணம் விரைந்து வழங்க வலியுறுத்தல்
/
பயிர்களுக்கான நிவாரணம் விரைந்து வழங்க வலியுறுத்தல்
பயிர்களுக்கான நிவாரணம் விரைந்து வழங்க வலியுறுத்தல்
பயிர்களுக்கான நிவாரணம் விரைந்து வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 17, 2024 05:41 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மணி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு:
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் உடைப்பு ஏற்பட்டு, விவசாயிகளின் பயிர்கள் பெருத்த சேதம் ஏற்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முதல்வரும் வெள்ள சேதத்தை பார்த்து சென்றார். பிறகு முதல்வர் அறிவித்து, பொது மக்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் பாதித்த நெல், வேர்க்கடலை, உளுந்து, தர்பூசணி, பனிப்பயிர், கரும்பு, காய்கறிகள், பூச்செடிகள், மரங்களுக்கும் நிவாரணம் வழங்கவும் அரசு தரப்பில் அறிவித்தனர்.
இதற்காக அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் பயிரிடும் பணியை தொடங்க முதல்வர் அறிவித்த நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.