/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வங்கி வாடிக்கையாளர் இறப்பு வாரிசுதாருக்கு காப்பீடு தொகை
/
வங்கி வாடிக்கையாளர் இறப்பு வாரிசுதாருக்கு காப்பீடு தொகை
வங்கி வாடிக்கையாளர் இறப்பு வாரிசுதாருக்கு காப்பீடு தொகை
வங்கி வாடிக்கையாளர் இறப்பு வாரிசுதாருக்கு காப்பீடு தொகை
ADDED : மே 24, 2025 12:20 AM

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர் இறந்ததால், அவரது வாரிசுதாரருக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்ட தொகையாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
வடுகப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், அவலுார்பேட்டை ஸ்டேட் பாங்க்கில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். மேலும், வங்கியில் பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்தார். முத்துசாமி சமீபத்தில் இறந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுகன்யாவிடம் கிளை மேலாளர் சம்பத்குமார், பாலிசி தொகை 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில், கள அலுவலர் ஈஸ்வரி பாலா, வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.