வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நம்ம பள்ளி நம்ம வாத்தியார்... / நம்ம பள்ளி நம்ம வாத்தியார்...
/
விழுப்புரம்
நம்ம பள்ளி நம்ம வாத்தியார்...
ADDED : ஆக 30, 2025 11:42 PM
நல்லொழுக்கமும், கல்வியும், மாணவர்களுக்கு இரு கண்கள் போன்றது. சிறந்த முறையில் கல்வி கற்றால் மேன்மையான வாழ்க்கை அமையும். இதைத்தான் ஆசிரியர்களாகிய நாங்கள் செய்து வருகின்றோம். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் பயின்ற பல மாணவ, மாணவிகள் பல அரசு துறைகளில் பணிபுரிகின்றனர். பலர் மாநில அளவில் பல விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று, அதன் வாயிலாக உயர் கல்வி பயில்கின்றார்கள். மாணவர் திருவேங்கடம் கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். மாணவர் அகிலன் கலைத்திறமைக்கான காமராஜர் விருது பெற்று உயர்கல்வி பயில்கிறார். இப்பள்ளி, மாணவர்களின் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைய வழி வகுத்துக்கொண்டிருப்பது, ஆசிரியர்களாகிய எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. -சந்திரசேகர், தலைமை ஆசிரியர்.
கண்டமானடி அரசு பள்ளி கடந்த 1962ல் தொடங்கி, தொடர்ந்து கிராமப்புற மாணவர்களுக்கு நல் வழிகாட்டி வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் தொடர் ஊக்கத்தால், மாணவர்கள் சாதித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கான இடம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். என்னை போன்று, இப்பள்ளியில் படித்த பல மாணவர்களும், உள்ளாட்சி பதவிகள் மட்டுமின்றி, அரசு துறைகளில் சாதித்து வருவது பெருமையாக உள்ளது. அரசு தரப்பிலும், தொகுதி எம்.எல்.ஏ., தரப்பிலும், இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து, சுற்றுப்பகுதி கிராம ஏழை மாணவர்களின் கல்விக்காக, இந்த பள்ளியும், ஆசிரியர்களும் சேவையாற்ற வேண்டும். அதற்கான உதவிகளையும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்வோம். -வீரா ஏழுமலை, கண்டமானடி ஊராட்சி மன்ற தலைவர்.
விழுப்புரம் நகரத்திற்கு சென்று படிக்க முடியாத, சுற்றுப்புற கிராம மாணவர்களின் நலனுக்காக, இந்த அரசு பள்ளியை மறைந்த எனது தந்தை தியாகி கோவிந்தசாமி பெரு முயற்சியோடு கடந்த 1962ல் கொண்டு வந்தார். தொடர்ந்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளியாக தரம் உயரவும், புதிய கட்டடங்கள் கொண்டு வரவும், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 1970ம் ஆண்டுகளிலேயே மாவட்ட அளவிலான பல விளையாட்டு போட்டிகளை நடத்தி ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் பல விளையாட்டு வீரர்கள், குறிப்பாக காவல் துறை, அரசு துறை அதிகாரிகளாக பலர் வந்து சாதித்து வருகின்றனர். பழம் பெரும் பள்ளியாக, கிராமப்புற மாணவர்களுக்கு இடைவிடாது கல்வி சேவை வழங்கி வருவது பெருமைக்குறியதாக உள்ளது. -நெடுஞ்செழியன், (முன்னாள் மாணவர்), மு.ஊராட்சி தலைவர்.
கோலியனுார் வட்டாரத்தில், கிராமங்களுக்கு மத்தியில், இப்பள்ளி வந்ததன் காரணமாகவே பல ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கனவை நனவாக்கினர். குறிப்பாக, கிராமப்புற மாணவிகள் தடையின்றி மேல்நிலை வகுப்புகள் வரை படிப்பதற்கும் வரப்பிரசாதமாக உள்ளது. நன்கு படித்து தேர்வதால், உயர் கல்விக்காக நகர்புறங்களுக்கு செல்கின்றனர். கொரானாவிற்கு பிறகு, பல தனியார் பள்ளி மாணவர்களும், இந்த அரசு பள்ளிக்கு திரும்பி வந்து, படித்து சாதித்துள்ளனர். கிராமப்புற மாணவர்களின் அடிப்படை கல்விக்கு அடித்தளமிடும் இப்பள்ளி போற்றுதலுக்குறியது. கிராமப்புற பள்ளியின் முக்கியத்துவம் கருதி, அரசு தரப்பிலும் தேவையான கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும். -ராஜி, (முன்னாள் மாணவர்) முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.