/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் தொழில் முனைவோர் சிறப்பு திட்டத்தில் சேர அழைப்பு வேளாண் தொழில் முனைவோர் சிறப்பு திட்டத்தில் சேர அழைப்பு

ADDED : அக் 31, 2025 02:27 AM
விழுப்புரம்:  மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர்கள், நிறுவனங்கள் சிறப்பு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், நிறுவனங்களை ஊக்கப்படுத்த ஒரு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது.
இந்த திட்டத்தில் ரூ.10 கோடி வரை புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் துவங்கும் தொழில்களுக்கு (சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இது தவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம், 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தொழில்கள் வேளாண், தோட்டக்கலை விளை பொருட்களின் இரண்டாம், மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும்.
திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதம் ஆக இருக்க வேணடும்.மீதமுள்ள தொகை வங்கி கடனாக பெறப்பட வேண்டும்.
மானிய தொகை, வேளாண் தொழில் முனைவோர்களுக்கு ஒரே தவணையாக அவர்களின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக விடுவிக்கப்படும்.
மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் முன்பே நிதியுதவி பெற்ற பயனாளிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
இதில் பயனடைய ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் தங்களின் திட்டம் குறித்த விரிவான அறிக்கை, வங்கி கடன் ஒப்புதல் கடிதத்தோடு, வேளாண் வணிகத்துறையை அணுகலாம்.
இது பற்றிய மேலும் விபரங்கள் பெற, துணை இயக்குநர், வேளாண் வணிக அலுவலக வேளாண் அலுவலர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ddab.villupuram2024@gmail.com ஆகியவற்றை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள் ளார்.
விழுப்புரம்:  மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர்கள், நிறுவனங்கள் சிறப்பு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ் மான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், நிறுவனங்களை ஊக்கப்படுத்த ஒரு சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது.
இந்த திட்டத்தில் ரூ.10 கோடி வரை புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் துவங்கும் தொழில்களுக்கு(சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என அதிகபட்சமாக, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இது தவிர அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம், 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தொழில்கள் வேளாண், தோட்டக்கலை விளை பொருட்களின் இரண்டாம், மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதம் ஆக இருக்க வேணடும்.
மீதமுள்ள தொகை வங்கி கடனாக பெறப்பட வேண்டும். மானிய தொகை, வேளாண் தொழில் முனைவோர்களுக்கு ஒரே தவணையாக அவர்களின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக விடுவிக்கப்படும்.
மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் முன்பே நிதியுதவி பெற்ற பயனாளிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
இதில் பயனடைய ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் தங்களின் திட்டம் குறித்த விரிவான அறிக்கை, வங்கி கடன் ஒப்புதல் கடிதத்தோடு, வேளாண் வணிகத்துறையை அணுகலாம்.
இது பற்றிய மேலும் விபரங்கள் பெற, துணை இயக்குநர், வேளாண் வணிக அலுவலக வேளாண் அலுவலர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி dd ab.villupuram2024@gmail.com ஆகியவற்றை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.