/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு சங்கத்தில் நெல் கொள்முதல் துவக்கம்
/
கூட்டுறவு சங்கத்தில் நெல் கொள்முதல் துவக்கம்
ADDED : அக் 31, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி:  செஞ்சி சந்தை மேட்டில் இயங்கி வரும் செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மறைமுக ஏலம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை துவக்கி உள்ளனர். இதில் அரசு மார்க்கெட் கமிட்டியை போன்று விவசாயிகளின் நெல்லை வியாபாரிகள் மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்ய உள்ளனர்.
கொள்முதல் செய்யப் படும் நெல்லுக்கு விவசாயி களின் வங்கி கணக்கில் அன் றைய தினமே பணம் பட்டுவாடா செய்ய உள்ளனர்.நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் மாரிப்பன், பொது மேலாளர் தேசிங்கு, உதவியாளர்கள் ரவி பழனிவேல் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

