நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : வீடு புகுந்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல்மலையனுார் அடுத்த அத்தியந்தல் கிராமத் தைச் சேர்ந்தவர் வடமலை, 57; விவசாயி. இவர் 19ம் தேதி, காலை யில் வீட்டை பூட்டிவிட்டு அவரது நிலத்திற்கு சென்றார்.
மதியம் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 14 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.