/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலைஞர் கனவு இல்லம் திட்டம்; 62 பேருக்கு வீடு கட்ட பணி ஆணை
/
கலைஞர் கனவு இல்லம் திட்டம்; 62 பேருக்கு வீடு கட்ட பணி ஆணை
கலைஞர் கனவு இல்லம் திட்டம்; 62 பேருக்கு வீடு கட்ட பணி ஆணை
கலைஞர் கனவு இல்லம் திட்டம்; 62 பேருக்கு வீடு கட்ட பணி ஆணை
ADDED : மே 03, 2025 10:44 PM

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 62 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., தேவதாஸ் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி கேசவன், வனிதா அரிராமன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் ஒன்றியத்தில், முதல் கட்டமாக 62 பயனாளிகளுக்கு, தலா 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசுகையில், 'அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஒருபுறம் மத்திய அரசிடம் நிதி, உரிமைக்காக போராட்டமும் நடத்தி வருகிறார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகார பகிர்வளிக்கும் சட்டத்தை கொண்டு வந்து, 14 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவத்தை அளித்துள்ளார். குடிசையில்லாத நிலையை எட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக இந்த ஒன்றியத்தில் 422 வீடுகள் வழங்கப்படுகிறது' என்றார்.
கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், பயனாளிகள் பங்கேற்றனர். பி.டி.ஓ., கார்த்திகேயன் நன்றி கூறினார்.