கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 20, 2026 09:07 PM
ADDED : நவ 20, 2026 09:07 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி திடலில், உழைக்கும் பெண்கள் ஒங்கிணைப்புக்குழு சார்பில் கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகி மலர்விழி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட குழு உறுப்பினர் கீதா, அங்கன்வாடி ஊழியர் மற்றும் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சுதா, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில குழு பரிமளா முன்னிலை வகித்தனர். கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, தலைவர் சேகர் கண்டன உரையாற்றினர். இதில், கள்ளக்குறிச்சி த.வெ.க., எம்.எல்.ஏ.,வை உடனடியாக கைது செய்யக்கோரியும், அவரது பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் முத்துகுமரன், பாலகிருஷ்ணன், அருள், சகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
