ADDED : ஜூலை 29, 2025 10:27 PM
விழுப்புரம்; விழுப்புரத்தில் 42ம் ஆண்டு கம்பன் விழா வரும் 1ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரம் கம்பன் கழகத்தின் சார்பில் மகாராஜபுரம் ஜெயசக்தி மண்டபத்தில் 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு சீனுவாசன் குழுவினரின் மங்கல இசையுடன் துவங்குகிறது.
விழா 3ம் தேதி வரை நடக்கிறது. கம்பன் கழக தலைவர் தனபால் வரவேற்கிறார். புதுச்சேரி கம்பன் கழக தலைவர் சிவக்கொழுந்து தலைமை தாங்குகிறார். கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் பேசுகிறார்.
தொடர்ந்து 2ம் தேதி மாலை 5:30 மணிக்கு சிந்தனை அரங்கம், நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து புலவர் ராமலிங்கம் தலைமையில் வழக்காடு மன்றமும் நடக்கிறது. 3ம் தேதி மாலை 5:30 மணிக்கு கம்பன் கழகம் நடத்திய பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.
லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் சேர்மன் ஜனகராஜ் பாராட்டி பேசுகின்றனர். தொடர்ந்து, மதுரை ராஜா நடுவராக பங்கேற்கும் பட்டி மன்றம் நடக்கிறது.