/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கருணாநிதி நினைவு நாள் அமைதி ஊர்வலம்
/
கருணாநிதி நினைவு நாள் அமைதி ஊர்வலம்
ADDED : ஆக 06, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் செல்ல, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செஞ்சி, திண்டிவனம், மயிலம் சட்ட சபை தொகுதியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் அனைத்து நகரம், ஒன்றியம், ஊராட்சி கிளைகளில், அமைதி ஊர்வலமாக சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.