/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் கோப்பை போட்டியில் வென்ற பெண் போலீஸ் அணிக்கு பாராட்டு
/
முதல்வர் கோப்பை போட்டியில் வென்ற பெண் போலீஸ் அணிக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை போட்டியில் வென்ற பெண் போலீஸ் அணிக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை போட்டியில் வென்ற பெண் போலீஸ் அணிக்கு பாராட்டு
ADDED : செப் 27, 2024 05:59 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் காவல் துறை வாலிபால் மகளிரணி முதலிடம் பெற்றது.
விழுப்புரத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி போட்டிகள் நடந்தது.
அரசு ஊழியர்களுக்கு நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், விழுப்புரம் மாவட்ட காவல் துறை மகளிரணி பங்கேற்று, வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்று அணியை சேர்ந்த சப் இன்பெக்டர்கள் அறிவழகி, சுதா, ஏட்டுகள் வரலட்சுமி, சத்தியப்பிரியா, அனிதா, காவலர்கள் அறிவழகி, இலக்கியா, வசந்தி, காயத்ரி, சிவகாமி, ரம்யா ஆகியோரை விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் பாராட்டினார்.