/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 01, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேக வழிபாடு, கடந்த 30ம் தேதி காலை 6:00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை நடந்தது.
நேற்று காலை 6:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. இதையடுத்து, 8:30 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி, 9:00 மணியளவில் பால கணபதி, அதே வளாகத்தில் உள்ள சிவசக்தி அம்மன், பாலமுருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

