/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பராமரிப்பின்றி கழிவறை தாலுகா அலுவலகத்தில் அவலம்
/
பராமரிப்பின்றி கழிவறை தாலுகா அலுவலகத்தில் அவலம்
ADDED : மார் 22, 2025 03:49 AM
வானுார்: வானுார் தாலுகா அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வானுார் தாலுகா அலுவலகத்திற்கு 65 பஞ்சாயத்துக்களில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய், ஜாதி, இருப்பிடம் சான்றிழ்களும், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் வாங்க தினமும் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
பொது மக்கள் அதிகளவில் கூடும் இந்த அலுவலக வளாகத்தில், கழிவறை உள்ளது. இந்த கழிவறைகள் போதிய பராமரிப்பில்லாததால் அசுத்தம் நிறைந்து அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. பொது மக்களின் நலன் கருதி, கழிவறையை தினமும் சுத்தம் செய்ய தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.