/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவிர தேர்தல் பணி துவங்க லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிவுரை
/
தீவிர தேர்தல் பணி துவங்க லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிவுரை
தீவிர தேர்தல் பணி துவங்க லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிவுரை
தீவிர தேர்தல் பணி துவங்க லட்சுமணன் எம்.எல்.ஏ., அறிவுரை
ADDED : செப் 28, 2025 03:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசியதாவது:
வரும் 2026 சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடி வாரியாக அமைக்கப்பட்ட நம் கட்சியின் தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது மற்றும் ஓட்டுச்சாவடிகள் வாரியாக, தி.மு.க., அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துச்சொல்லி, அதனை வாக்குகளாக மாற்றி, தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இந்த பணிகளை ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் கண்காணித்து, வரும் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய வெற்றி பெறவும், தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், தலைமை வழக்கறிஞர் சுவைசுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், நகர பொறுப்புகுழு உறுப்பினர் கற்பகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், சந்திரசேகர், வளவனுார் பேரூர் செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.