/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
/
சட்ட விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
ADDED : அக் 31, 2025 02:31 AM

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடந்தது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்த கண்காட்சியை, முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி துவக்கி வைத்தார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். இதில், பல்வேறு வகையில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அப்போது, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், நீதிபதிகள் பாக்கியஜோதி, வினோதா, ஸ்ரீராம், ஜீவநந்தினி, குமாரவர்மன், தமிழ்செல்வன், வரலட்சுமி, பாலசுப்ரமணியன், வெங்கடேசன், கவிதா, முருகன், பாலரத்னா, ராஜேஸ்வரி, சந்திரகாசபூபதி, அரவிந்த் பாரதி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் சகாதேவன், ராஜகுரு, பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

