ADDED : அக் 22, 2026 04:56 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு சட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
