/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மீது லாரி மோதி விபத்து குழந்தை உட்பட 3 பேர் காயம்
/
கார் மீது லாரி மோதி விபத்து குழந்தை உட்பட 3 பேர் காயம்
கார் மீது லாரி மோதி விபத்து குழந்தை உட்பட 3 பேர் காயம்
கார் மீது லாரி மோதி விபத்து குழந்தை உட்பட 3 பேர் காயம்
ADDED : டிச 09, 2025 03:46 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் எட்டு மாத குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் மதின்பாஷா, 40; இவர் தனது மனைவி சுல்தானா, 32; எட்டு மாத குழந்தை ஷியா பாத்திமா மற்றும் அவரது தம்பி ஜியாவுதீன் மனைவி சாத்தியாகிராம், 25; ஆகியோருடன் கியா காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றார்.
விழுப்புரம் அடுத்த ஊழியர் நகர் பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த டாராஸ் லாரி கார் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுல்தானா, ஷியா பாத்திமா, சாத்தியாகிராம் ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.