ADDED : நவ 21, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
வானுார் தாலுகாவில், அரசுக்கு சொந்தமான நீர் நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது. நில உரிமையாளர்களுக்கு பட்டா மாற்றத்தை உடனடியாக வருவாய்த் துறையினர் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., வானுார் வட்ட கிளை சார்பில், தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் ந டந்தது.
வட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகன், அர்ஜூனன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வட்டக் குழு உறுப்பினர்கள் சேகர், சுந்தரமூர்த்தி, சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

