/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
/
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
ADDED : டிச 26, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வரசித்தி விநாயகர் கோவிலில், தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. 10:00 மணிக்கு ரயிலடி ராஜகணபதி கோவிலில் இருந்து திருஆபரண பெட்டி, பால்குடம் புறப்பாடு, பாலாபிஷேகம் மற்றும் மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.
இதில், தர்மசாஸ்தா அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

