ADDED : நவ 03, 2024 11:11 PM

செஞ்சி: செவலபுரை அகஸ்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது.
இக்கோவிலில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்த நிலையில், நிறைவு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம், 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. 9:30 மணிக்கு அனைத்து மூலவ மூர்த்திகளுக்கும் மஹா அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும், தொடர்ந்து கலசாபிஷேகம், 11:00 மணிக்கு அகஸ்தீஸ்வரருக்கு 108 சங்கு அபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை செவலபுரை, தாதிகுளம், தாதங்குப்பம், சித்தாத்துார், சிறுவாடி, ராமகிருஷ்ணாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தினசரி நடந்து வந்தது. நிறைவு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு புன்யாஹவாசனம், அக்னி ஆராதன ஹோமமும், 9:30 மணிக்கு மூலவர் வைகுண்டவாச பெருமாளுக்கு திருமஞ்சனமும் நடந்தது. 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், சாற்றுமுறையும், தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.