/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உலக ஒற்றுமையை வலியுறுத்தி திண்டிவனத்தில் மாரத்தான் போட்டி
/
உலக ஒற்றுமையை வலியுறுத்தி திண்டிவனத்தில் மாரத்தான் போட்டி
உலக ஒற்றுமையை வலியுறுத்தி திண்டிவனத்தில் மாரத்தான் போட்டி
உலக ஒற்றுமையை வலியுறுத்தி திண்டிவனத்தில் மாரத்தான் போட்டி
ADDED : அக் 03, 2025 07:30 AM
திண்டிவனம்; திண்டிவனத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி வரும் 5ம் தேதி நடக்கிறது.
போட்டி அரசு பொறியியல் கல்லுாரியில் இருந்து வரும் 5ம் தேதி காலை 6:00 மணிக்கு போட்டி து வங்குகிறது. போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான், சப் கலெக்டர் ஆகாஷ், ரவிக்குமார் எம்.பி., உட் பட பலர் பங்கேற்கின்றனர்.
சீனியர் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக போட்டி நடக்கிறது. சீனியர் பிரிவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஜூனியர் பிரிவில் 10 வயதிலிருந்து 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.
சீனியர் பிரிவில் 6 கி.மீ., துாரமும், ஜூனியர் பிரிவில் 2 கி.மீ., துாரம் நடக்கிறது. போட்டியில் சீனியர் பிரிவில் முதல் இடத்தை பிடிப்பவருக்க 50 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய், மூன்றாமிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நான்காம் இடத்திலிருந்து 25ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.