/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தியாகிகள் மணி மண்டபம்; அமைச்சர் பார்வை
/
தியாகிகள் மணி மண்டபம்; அமைச்சர் பார்வை
ADDED : நவ 18, 2024 08:09 PM

விழுப்புரம் ; விழுப்புரத்தில் அரசு சார்பில் 9.70 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் மணிமண்டபத்தை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில், தமிழக அரசு சார்பில் 9.70 கோடி ரூபாய் மதிப்பில், இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 21 தியாகிகளுக்கான மணிமண்டபம் மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு நினைவரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின், வரும் 29ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று மாலை நேரில் வந்து பார்வையிட்டார்.
அப்போது, அதிகாரிகளிடம், இறுதிக்கட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், சேர்மன் தமிழ்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., நகர தலைவர் ஜீவா, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய செயலர்கள் ராஜா, தெய்வசிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.