/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருமான வரித்துறை அலுவலகத்தில் மே தின விழா
/
வருமான வரித்துறை அலுவலகத்தில் மே தின விழா
ADDED : மே 02, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வருமான வரித்துறை அலவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் சேர்மன் சுப்பராயலு சாலையில் உள்ள வருமான வரித்துறை அலவலகத்தில், வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் 139வது ஆண்டு மே தின விழா நடந்தது.
கிளைச் செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வெங்கடேசன், மண்டல செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.
வருமான வரித்துறை அதிகாரி அசன்அலிஜாகீர் தொழிற் சங்க கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.