sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செய்தி சில வரிகளில்...

/

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : செப் 28, 2024 04:52 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேம்பாலம் பணி: சேர்மன் ஆய்வு


கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம், பொதுமக்களின் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு டி.பி.எல்., ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் வரும் அக்.,15ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். 20ம் தேதி பாலத்தின் ஒரு மார்க்கத்தில் (தெற்கு பகுதி) போக்குவரத்து தொடங்கும் என உறுதியளித்தனர்.

பாதயாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு


உலகம் மற்றும் சமூக அமைதி வேண்டி, புத்த பிக்சுகள் 50 பேர், கேரளா - புதுச்சேரி வரை பாதயாத்திரையை கடந்த சில தினங்களுக்கு முன் துவக்கினர். இந்த பாதயாத்திரை குழுவினர், விழுப்புரத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு வி.சி., கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் முகிலன், எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட பொருளார் சின்னதம்பி, கோலியனுார் ஒன்றிய துணைசெயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொது மருத்துவ முகாம்


விழுப்புரம் லயன் சங்கம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை குழு, விழுப்புரம் மருந்து வணிகர் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், பொது மருத்துவம், கண், எலும்பு, குழந்தைகள், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கத் தலைவர் சுப்ரமணியன், கோபு, மருந்து வணிகர் சங்கத் தலைவர் சின்னையா, ஊராட்சி தலைவர் சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட விளையாட்டு போட்டி


விழுப்புரம் த நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள், குறுமைய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஆண்கள் பிரிவில் கைப்பந்து, வளைப்பந்து, இறகு பந்து, சதுரங்கம், மேஜை பந்து, கோகோ, டென்னிஸ், மல்லர்கம்பம், சிலம்பம் ஆகிய போட்டிகளிலும்; பெண்கள் பிரிவில், வளைப்பந்து, இறகு, மேஜை பந்து, கேரம், டென்னிஸ், தடகளம், மல்லர்கம்பம், நீச்சல் ஆகிய போட்டிகளில் வென்றனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை, நியூ ஜான்டூயி பள்ளி தாளாளர் வீரதாஸ், நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின் ஆகியோர் பாராட்டினர்.

பஸ் நிலைய பணி: ஆய்வு


திண்டிவனம் - சென்னை சாலையில் 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இறுதிக் கட்டப் பணி நடைபெறும் நிலையில், நகர மன்ற தலைவர் நிர்மலார விச்சந்திரன் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். நகராட்சி மேலாளர் நெடுமாறன், உதவி பொறியாளர் கலைவாணி, ஏ.ஆர்.ஓ.,பழனி உடனிருந்தனர்.

இலவச சைக்கிள் வழங்கல்


காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிளை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கி வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் இளங்கோதை வரவேற்றார். ஊராட்சி தலைவர் கமலநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

உழவர் சந்தை: ஆர்.டி.ஓ., ஆய்வு


விக்கிரவாண்டியில் பஸ் நிலையம் பின்புறம் புதியதாக உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் சந்தை அமைக்க அனுமதி வழங்க விழுப்புரம் ஆர்.டி.ஓ., ஷாகுல் அமீது ஆய்வு செய்து, வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், சர்வேயர் முத்து கிருஷ்ணன், வி.ஏ.ஓ., ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இலவச சைக்கிள் வழங்கல்


மயிலம் அடுத்த அகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி, இலவச சைக்கிள் வழங்கி பேசினார். ஒன்றிய கவுன்சிலர் பரிதா சுல்தான், ஊராட்சி தலைவர் சம்பத் முன்னிலை வகித்தனர். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன் வாழ்த்திப் பேசினர்.

விவசாயிகளுக்கு பயிற்சி


மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தில் ஆத்மா திட்டம் சார்பில் நடந்த, விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாமிற்கு, மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய நுண்ணீரல் துறை இணை பேராசிரியர் ஜமுனா பேசினார். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் உதவி அலுவலர் சத்யா மற்றும் ஆத்மா திட்ட பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழா


கண்டமங்கலம் அடுத்த பள்ளிநேலியனுார் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துாய்மை பாரத இயக்கம் சார்பில், நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில் ஊராட்சி தலைவர் நாயகம் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கஜேந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்தரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்க புதுச்சேரி தாசில்தார் அய்யனார் பரிசு வழங்கினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்


விழுப்புரத்தில் காவல்துறை மற்றும் யு.கே., சமுதாய கல்லுாரி மாணவர்கள் சார்பில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தொடங்கி வைத்தார். மேற்கு சப் இன்ஸ்பெக்டர்கள் பிரியங்கா, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். நான்குமுனை சிக்னல் சந்திப்பு பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம் முக்கிய சாலை வழியாக விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி சென்றனர். யு.கே., சமுதாய கல்லுாரி நிர்வாக அலுவலர் கயல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.

வல்லம் ஒன்றிய கூட்டம்


வல்லம் ஒன்றிய குழு கூட்டம் சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இளங்கோ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வல்லம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு ஒப்புதல் வழங்குவது. கிராமங்ளில் அடிப்படை தேவைகளை கண்டறிந்து சரி செய்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

பரிசளிப்பு விழா


விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே நடந்த துாய்மையே சேவை விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி பரிசு,சான்றிதழ்கள் வழங்கி பேசினார். பி.டி.ஓ.,கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன், மேலாளர் டேவிட் குணசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இலவச சைக்கிள் வழங்கல்


வல்லம் அடுத்த கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தலைமையாசிரியர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். உதவி தலையைாசிரியர் பாலமுருகன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் கோபால், ஊராட்சி தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் ஆகியோர் 90 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வி.சி., நிர்வாகி இடை நீக்கம்


விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர், கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய வி.சி., செயலாளர் விஜயகுமார் என்கிற வெற்றிவேந்தன், கட்சி பொறுப்பிலிருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் திலீபன் அறிவித்துள்ளார்.

பருவமழை ஆய்வுக் கூட்டம்


திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்திற்கு, உதவி ஆணையர் (கலால்) முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் சிவா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்புதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைககள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சேவியர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரத்தினசாமி வரவேற்றார். மாநில துணைத் தலைவர் அலெக்சாண்டர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தொடர்ச்சியாக அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்தும், அதனை கைவிட கோரியும் வலியுறுத்தப்பட்டது.

பரிசளிப்பு விழா


வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு துாய்மையே சேவை தலைப்பின் கீழ் வல்லம் வட்டார வளமையத்தில் மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியில் நடந்தது.

பி.டி.ஓ., உதயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us