/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மினி டைடல் பார்க்' திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை: எம்.எல்.ஏ., ஆவேசம்
/
'மினி டைடல் பார்க்' திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை: எம்.எல்.ஏ., ஆவேசம்
'மினி டைடல் பார்க்' திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை: எம்.எல்.ஏ., ஆவேசம்
'மினி டைடல் பார்க்' திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை: எம்.எல்.ஏ., ஆவேசம்
ADDED : பிப் 17, 2024 11:12 PM

வானுார்: மினி டைடல் பார்க் திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்காதது குறித்து கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 'மினி டைடல் பார்க்' கை நேற்று முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முன்னதாக, டைடல் பார்க் வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த தொகுதி எம்.எல்.ஏ.,வான அ.தி.மு.க.,வை சேர்ந்த சக்கரபாணி, திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்காதது குறித்து கலெக்டர் பழனியிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பி, தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர், அங்கிருந்து வெளியேறிய அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் சண்முகம் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பின், விழுப்புரத்திற்கு மினி டைடல் பார்க் கொண்டு வரப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, இடம் இல்லை எனக்கூறி டைட்டில் பார்க் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற ஆளும் கட்சியினர் முயன்றனர். நான், அமைச்சரிடம் பேசி, எனது தொகுதிக்கு டைடல் பார்க் கொண்டு வந்தேன்.
இதற்கான இடத்தை தேர்வு செய்து, சாலை வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தேன். விரைவில் டைடல் பார்க் கட்டி முடிக்க வேண்டும் என்று சட்டசபையில் வலியுறுத்தினேன்.
தற்போது டைடல் பார்க் திறப்பு விழாவிற்கு, கலெக்டரோ, அதிகாரிகளோ எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.
ஆனால் அழைப்பு விடுத்ததாக மழுப்பலாக பதில் கூறுகின்றனர்.
ஆதிதிராவிடர் எம்.எல்.ஏ., என்பதாலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., என்பதற்காகவும் என்னை புறக்கணித்தார்களா என தெரியவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்' என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி, சென்னை டைடல் பார்க் செயற்பொறியாளர் பாலாஜி, ஒன்றிய துணைச் சேர்மன் பருவகீர்த்தனா, மாவட்ட கவுன்சிலர்கள் பிரேமா, கவுதம், அன்புமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, காமாட்சி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.