/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய கேரம் போட்டியில் வென்ற மாணவருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
/
தேசிய கேரம் போட்டியில் வென்ற மாணவருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
தேசிய கேரம் போட்டியில் வென்ற மாணவருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
தேசிய கேரம் போட்டியில் வென்ற மாணவருக்கு எம்.எல்.ஏ., வாழ்த்து
ADDED : நவ 10, 2025 11:14 PM

விழுப்புரம்: தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற விழுப்புரம் மாணவர் பவன்குமார், பொன்முடி எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய பிரதேசம் குவாலியரில் 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
போட்டியில், விழுப்புரம் துாய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர் பவன்குமார், தனி நபர் பிரிவிலும், அணி சாம்பியன்ஷிப்பிலும் முதல் பரிசை வென்று தங்கப் பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவரை பொன்முடி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாவட்ட கேரம் அசோசி யேஷன் செயலாளர் இளஞ் செழியன், பொருளாளர் மற்றும் பயிற்சியாளர் கோபி கிருஷ்ணன், இணைச் செயலாளர் கவுதமன் மற்றும் பவன்குமார் பெற்றோர் விஜயகுமார், சசிகலா உடனிருந்தனர்.