/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அழகியநாதேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
/
அழகியநாதேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
ADDED : நவ 10, 2025 11:15 PM
கண்டாச்சிபுரம்: கெடார் பெரியநாயகி சமேத அழகியநாதேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த கெடாரில் உள்ள பழமை வாய்ந்த பெரியநாயகி சமேத அழகியநாதேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷகத்திற்கான திருப்பணிகள் தொடங்க உள்ளது. இதனையொட்டி நேற்று பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.
அதனையொட்டி காலை 7:00 மணி முதல் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து கோபூஜையும் தேவார, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின் பெரிய நாயகி சமேத அழகிய நாதேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பாலாலய பூஜையும், தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.
இதில், விழுப்புரம் மாவட்ட அறநிலைத்துறை அதிகாரிகள், கெடார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் அறநிலைத் துறையினர் செய்தனர்.

