/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துார் வாரும் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
/
துார் வாரும் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஆக 02, 2025 07:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
விழுப்புரம் நகராட்சியில் கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
மகாராஜபுரம் பகுதியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி கமிஷனர் வசந்தி, தி.மு.க., நகர பொறுப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், கவுன்சிலர்கள் மணவாளன், ஜெயந்தி மணிவண்ணன், ஜனனி தங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், விவசாய அணி கேசவன், அவைத்தலைவர் கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.