/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் பழுதான லிப்ட் சீரமைக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
/
அரசு மருத்துவமனையில் பழுதான லிப்ட் சீரமைக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
அரசு மருத்துவமனையில் பழுதான லிப்ட் சீரமைக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
அரசு மருத்துவமனையில் பழுதான லிப்ட் சீரமைக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஏப் 20, 2025 11:49 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பழுதடைந்துள்ள லிப்ட்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அமைச்சருக்கு தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்;
விக்கிரவாண்டி தொகுதி முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக, 10 லிப்டுகள் இயங்குகின்றன. இதில் தற்பொழுது 4 லிப்ட்கள் பழுதடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மாடிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். நோயாளிகள் நலன் கருத்தில் மருத்துவமனையில் செயல்படாமல் பழுதாகி உள்ள 4 லிப்ட்களை உடனடியாக சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.