/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை பாதிப்பு குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு
/
மழை பாதிப்பு குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : டிச 01, 2024 05:53 AM

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்.எல்.ஏ., அர்ஜூனன் ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயல் காரணமாக நேற்று மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் மீனவ கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இந்த பகுதிகளை திண்டிவனம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை அரசிடம் கூறி பெற்று தறுவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். கன மழை பெய்வதால் மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் மேலும் வீட்டில் இருந்து யாறும் வெளிய வரவேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

