UPDATED : நவ 07, 2026 03:18 PM
ADDED : நவ 07, 2026 03:16 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விழுப்புரம், வழுதரெட்டி குடியிருப்பு பகுதியில், கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து, அறிஞர் அண்ணா தெரு, மாரியம்மன் கோவில் தெருக்களில் கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, நகராட்சி ஊழியர்கள் மூலம் உடனே சீர்படுத்த நடவடிக்கை எடுத்த அவர், அந்த பகுதியில், சாலையோரம் புதிய வாய்க்கால் கட்டுவது மற்றும் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். நகராட்சி அலுவலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
