/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சப் கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
/
சப் கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : நவ 10, 2025 11:12 PM

திண்டிவனம்: வாக்காளர் படிவம் வழங்கப்படவில்லை மற்றும் ஓட்டுச்சாவடியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து சப் கலெக்டரிடம், எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
திண்டிவனம் சப் கலெக்டர் (பொறுப்பு) லுார்துசாமியிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் அளித்த மனு:
திண்டிவனம் நகராட்சி 10வது வார்டு, டி.வி.,நகர் பகுதியில் வாக்காளர் படிவம் வழங்கப்படாமல் உள்ளது. சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி எண் 97 மற்று ம் 98ல் கடந்த தேர்தலின் போது, அங்குள்ள வளர்மதி கருப்பையா தொடக்க பள்ளியில் வாக்காளர் கள் ஓட்டு போட்டனர்.
தற்போது அந்த இடத்தை சஞ்சீவிராயன்பேட்டை பகுதி, ஏரிக்கரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த மையம் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல் இருப்பதால் வேறு இடத்தில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற சப்கலெக்டர், 10வது வார்டில் வாக்காளர் படிவம் கொடுக்கும் பணி துவங்கி விட்டது. சஞ்சீவிராயன்பேட்டையில் ஓட்டுச்சாவடி மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், ஜெ., பேரவை நிர்வாகிகள் பாலசுந்தரம், ரூபன்ராஜ், வடபழனி, விஜயகுமார், மாநில எம்.ஜி.ஆர்., மன்றம் ஏழுமலை, நகர இளைஞரணி உதயகுமார், வழக் கறிஞர் குலசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

