/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு
/
கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு
கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு
கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த எஸ்.எஸ்.ஐ., சாவு
ADDED : நவ 10, 2025 11:12 PM

அவலுார்பேட்டை: வளத்தி அருகே கார் விபத்தில் படுகாயமடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இறந்தார்.
செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், 52; மேல்மலையனுார் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு 10;20 மணிக்கு, பணி முடிந்து அவரது எட்டியாஸ் காரில் தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
வளத்தி - செஞ்சி மெயின் ரோட்டில் நீலாம்பூண்டி அருகே திடீரென காரின் இடது பக்க முன் டயர் வெடித்து நிலை தடுமாறி, சாலையோரம் நிலத்தில் கவிழ்ந்ததில் கும ரேசன் படுகாயமடைந்தார் .
அங்கிருந்தவர்கள் குமரேசனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை 4;00 மணிக்கு இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
இது குறித்த அவரது மகன் கவுதம், 20; அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

