/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி செயலர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
/
ஊராட்சி செயலர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
ஊராட்சி செயலர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 26, 2025 04:57 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர்களுக்கு வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., சசிகலா வரவேற்றார்.
கூட்டத்தில், தண்ணீர் சூழம் தாழ்வான பகுதியில் இருப்பவர்களை பாதுகாப்பாக சமுதாய கூடம், பள்ளிகளில் தங்க வைக்க வேண்டும், மழை இடர்பாடுகளை சமாளிக்க மீட்பு பணிக்கான பொருட்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
ஊராட்சி செயலர்கள், துாய்மைப் பணியாளர் ஆகியோர் எந்நேரமும் பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய சேர்மன் அறிவுறுத்தினார்.
துணை பி.டி.ஓ.,க்ள் சுந்தரபாண்டியன், காஞ்சனா, அபிராமி, பர்குணன், விஜயகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.
மண்டல துணை பி.டி.ஓ., ஏழுமலை நன்றி கூறினார்.