/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி டோல்கேட்டில் திரண்ட ஓட்டுனர்கள்
/
கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி டோல்கேட்டில் திரண்ட ஓட்டுனர்கள்
கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி டோல்கேட்டில் திரண்ட ஓட்டுனர்கள்
கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி டோல்கேட்டில் திரண்ட ஓட்டுனர்கள்
ADDED : நவ 13, 2024 08:28 AM

வானுார் : பட்டானுார் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சுற்றுலா கார் ஓட்டுநர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை, மொரட்டாண்டியில் உள்ள பட்டானுார் சுங்கச்சாவடியில் கடந்த 4ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.
உள்ளூர்வாசிகளின் வாகனங்கள் 20 கி.மீ., துாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாதம் ரூ. 150யாக இருந்த கட்டணம் 340 ஆக உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து, நேற்று புதுச்சேரி நம்மவர் ஓட்டுநர் நல சங்கத் தலைவர் கணேசன், ஆரோவில் டாக்சி டிரைவர் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா கார் ஓட்டுநர்கள், டோல்கேட் அலுவலகத்தில் திரண்டனர்.
மேலாளர் இல்லாததால், ஊழியர்களிடம், கட்டணம் உயர்த்தியதற்கான ஆணையை கேட்டும், பழைய கட்டணத்தை தொடர வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
ஆரோவில் போலீசார், மேலாளர் வந்த பிறகு கோரிக்கை குறித்து பேசி முடிவெடுக்கலாம் என கூறியதை தொடர்ந்து, ஓட்டுநர் சங்கத்தினர் டோல்கேட் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். வரும் வெள்ளிக்கிழமைக்குள் கட்டண உயர்வை குறைக்காவிட்டால், சாலை மறியல் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

